முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் உற்சாகம்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      தமிழகம்
tHiruchendur-festivel

Source: provided

திருச்செந்தூர்:திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.  விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

தொடர்ந்து 8-ம் திருவிழா நாளில் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  9-ம் நாளான நேற்று முன்தினம் (பிப்.22) சுவாமி வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  திருவிழா நாட்களில் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சூரிய காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், வேல் குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10-ம் நாள் தேரோட்டம் நேற்று காலையில் நடைபெற்றது.  இதனையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோயில் நடைதிறக்கப்பட்டது. பின்பு 4.30 மணியளவில் விசுவரூப தீபாரானையும்,  5 மணியளவில் உதயமாத்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து மாசித்திருவிழா தேரோட்டம் தொடங்கியது.

முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேரானது ரதவீதி நான்கிலும் பவனி வந்தது.  இதனைத்தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டது.  இந்த பெரிய தேரை மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் ரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ‘அரோகரா’ பக்தி கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  இதனையடுத்து தேர் ரதவீதி நான்கிலும் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது.  பின்னர் தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகளில் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது.  இந்த தேரோட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  மாசி திருவிழாவின் தெப்ப உற்சவம் இன்று இரவு நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து