முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை: விமானப்படை விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட கல்லீரல்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      இந்தியா
Jet-Airways 2023-09-14

Source: provided

புதுடெல்லி : முன்னாள் ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான டார்னியர் விமானத்தில் புனேவில் இருந்து கல்லீரலை எடுத்துக் கொண்டு மருத்துவ குழுவினர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள புனேவில் இருந்து கல்லீரலை கொண்டு வர இந்திய விமானப்படை உதவி செய்துள்ளது. 

இது குறித்து இந்திய விமானப்படை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

கடந்த 23-ம் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான டார்னியர் விமானத்தில் புனேவில் இருந்து கல்லீரலை எடுத்துக் கொண்டு மருத்துவ குழுவினர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து