முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகுதி செயலாளர் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பெண்களுக்காக பெரிதும் உழைத்து பல திட்டங்களை கொடுத்தவர் அம்மா முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ புகழாரம்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      தமிழகம்
Sellur-Raju

Source: provided

மதுரை : மத்திய பகுதி செயலாளர் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பெண்களுக்காக பெரிதும் உழைத்து பல திட்டங்களை கொடுத்தவர் என்று அம்மா முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  76 வது பிறந்தநாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட மத்திய தொகுதி அ.தி.மு.க.சார்பில் மத்திய 6 - ம் பகுதி செயலாளர் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் ஆரப்பாளையம் கிராஸ்ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், டாக்டர் சரவணன், வி.பி.ஆர்.செல்வகுமார், சக்திமோகன், எம்.எஸ்.கே.மல்லன், ஆர்.கே.ரமேஷ், சுகந்திஅசோக், ஏ.பார்த்திபன், ஜெ.மாணிக்கம், தளபதி மாரியப்பன், மகேந்திரன், ஞானசேகரன், ரவிராஜ், ஜெயம்ஜெயபாண்டி, பஜார்துரைப்பாண்டி, கார்னர் பாஸ்கர், பாண்டிசெல்விஞானசேகரன், ராணிநல்லுச்சாமி, போஸ்பாண்டி, ராஜூ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மதுரை மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது-

தமிழக பெண்களுக்காகவே வாழ்ந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 10 மொழி தெரிந்த ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.மதுக்கடையை முதன்முதலாக கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதிதான்.கனிமொழி இளம் விதவைகள் உருவாவதற்கு காரணம் மது கடைகள் தான் என்று சொன்னார் இப்பொழுது அவர்கள் ஆட்சி நடைபெற்ற வருகிறது. மதுக்கடைகளை மூடிவிட்டார்களா.பெண் சிசுக் கொலையை தடுத்து நிறுத்திய பெருமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக்கு மட்டுமே சேரும் பெண்களுக்காக பெரிதும் உழைத்தவர் ஜெயலலிதா மட்டுமே. பெண்களுக்கான பல திட்டங்களை கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.நீட் தேர்வு தமிழகத்தில் இருந்து வருவதற்கான முக்கிய காரணம் திமுக மட்டுமே.முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தி காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.போன ஆண்டு சட்டமன்றத்தில் என்ன விதமான நிதிநிலை அறிக்கையை கொடுத்தார்களோ அதே நிதி நிலை அறிக்கையை இந்த முறையும் கொடுத்துள்ளார்கள் எந்தவித வளர்ச்சிப் பணிகளும் எந்த வித திட்டங்களும் இல்லை என்பது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தின் மீது கடன் மீது கடன் வாங்கி கடன் மாநிலமாக மாற்றி விட்டார்கள் தமிழகத்தை வறண்ட மாநிலமாக மாற்றிய பெருமை திமுகவிற்கு சேரும்.ஆயிரம் ரூபாய் மகளிர்க்கு வழங்குவோம் என்று சொல்லுகிற தமிழக அரசு திருமண நிதி 25,000 ஐ நிறுத்திய உள்ளது வேதனை அளிக்கிறது.திமுகவிற்கு இனிமேல் பொதுமக்கள் வாக்களிக்க மாட்டார்கள் இனிவரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார்.காய்கறி உள்ளிட்ட அனைத்து விலைவாசி பொருட்களும் வெளியேற்றத்தை கண்டுள்ளது தான் திமுகவின் அரசின் சாதனை.திமுகவில் மிக மலிவாக கிடைப்பது கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மட்டும் தான் இதனால்  தமிழகத்தில் வன்முறை நிலவி வருகிறது.வரி உயர்வு தமிழகத்தில் அதிகமாக உள்ள காரணத்தினால் கேரளா அண்டை மாநிலங்களில் பெரோல் டீசல் விலைகுறைவாக உள்ளது. இதனால் தமிழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இந்த ஆட்சியின் பெரிய சாதனை பஞ்சுமிட்டாயிக்கு தடை விதித்தது மட்டுமே வேறு எந்த விதமான சாதனையும் திமுக அரசு செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து