முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அளவில் கால்பந்து போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கி பாராட்டினார் அமைச்சர்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      தமிழகம்
RAJA 2023 08 01

Source: provided

சென்னை : மாநில அளவில் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மன்னார்குடி தூய வளனார் பெண்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதக்கம் அணிவித்து கோப்பை,  சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். 

மன்னார்குடி தூய வளனார் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டும் நிகழ்வு நேற்று (26.02.24) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டார். மேலும்,  மன்னை நகர மன்ற தலைவர் சோழராஜன்,  மன்னை நகர திமுக செயலாளர் வீரா. கணேசன்,  மன்னை நகரின் முக்கிய பிரமுகர் கு.பா.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அமைச்சர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை தா. ஜெபமாலை பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.  மேலும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா,  தலைமை ஆசிரியை ஜெபமாலைக்கு சந்தன மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும்,  மாநில அளவில் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதக்கம் அணிவித்து கோப்பை, சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கி பாராட்டினார்.  நிகழ்வில் மாணவிகளை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள்,  அருட் சகோதரிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து