எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில், அரசு மருத்துவர்களின் பங்களிப்புடன் கூடிய சேமநல நிதி ரூ.7 கோடியினை பணியின் போது உயிரிழந்த ஏழு மருத்துவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “தமிழக அரசுப்பணிகளில் பணிபுரிந்து வருகின்ற மருத்துவர்கள், எதிர்பாராத வகையில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களைச் சார்ந்த வாரிசுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கிட மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு நிதி 2020ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஒவ்வொரு மருத்துவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்நிதியத்தில் சேர்ந்து அவரவர்களின் பங்களிப்பாக 2020, 2021ஆம் ஆண்டில் ரூ.6000 மொத்தமாக செலுத்தினார்கள்.
முதல்வர் ஸ்டாலின் 12.10.2021 அன்று அந்த விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதி என்பது ரூ.50 லட்சம் என்று இருந்ததினை ரூ.1 கோடியாக உயர்த்தி அரசாணை பிறப்பித்தார்கள். அதனடிப்படையில் மார்ச் 2022ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் தத்தமது ஊதியத்திலிருந்து ரூ.500 அவரவர்களுடைய சுயவிருப்பத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் அடிப்படையில் 2000 மருத்துவர்கள் மட்டுமே இணைந்திருந்தார்கள். தற்போது இத்திட்டம் 11,000 மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்து அதனடிப்படையில் மாதந்தோறும் தங்களது ஊதியத்திலிருந்து ரூ.500 பிடித்தம் செய்வதற்கு ஒப்பளித்து இந்த நிதியத்தில் இணைந்து இருக்கிறார்கள். மற்ற மருத்துவர்களும் படிப்படியாக இத்திட்டத்தில் இணைந்து வருகிறார்கள். இத்திட்டத்தை பொறுத்தவரை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்த வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் சங்கங்களின் ஆலோசணையினை பெற்று, 9 மருத்துவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், 4 மருத்துவர்களுக்கு தலா ரூ.1 கோடியும் என்று ரூ.8.50 கோடிக்காண காசோலைகளை, 13.04.2023 அன்று மருத்துவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது 2-ம் கட்டமாக 2022 -ம் ஆண்டு பணியின்போது, உயிரிழந்த 7 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு, தலா ரூ.1 கோடி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மருத்துவர் சஞ்சய்யின் துணைவியார் வி.பூங்குழலி, மருத்துவர் எஸ்.மோகன்குமாரின் துணைவியார் எம்.பிரியாவுக்கும், மருத்துவர் எஸ்.சின்தன்னின் துணைவியார் சண்முகப்பிரியாவுக்கும், மருத்துவர் எஸ்.முகமது ஜாஸ்மினின் தந்தை எஸ்.சிந்தாஷேக்மதாருக்கும், மருத்துவர் அருண்குமாரின் துணைவியார் மருத்துவர் எஸ்.ரூபகாளீஸ்வரிக்கும், மருத்துவர் டி.சிவகுமாரின் துணைவியார் கீதாவுக்கும், மருத்துவர் பி.பாஸ்கரனின் துணைவியார் மணிமலருக்கும் தலா ரூ. 1 கோடி சேமநல நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயனை நன்குணர்ந்து ஏராளமாணவர்கள் இந்த நிதியத்தின் தாங்களாகவே உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர் என்பது சிறப்பு. தமிழக முதல்வர் ஸ்டாலினால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் இரண்டாவது ஆண்டாக ரூ.7 கோடி நிதியத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


