Idhayam Matrimony

நடப்பு ஐ.பி.எல். தொடரில் கோலி விளையாடுவாரா? - கவாஸ்கர் சொன்ன பதில்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      விளையாட்டு
Gavaskar 2023 06 09

Source: provided

பெங்களூரு : விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

முதல் போட்டியில்...

ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கவாஸ்கர் பதில்...

ராஞ்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுனில் கவாஸ்கரிடம், நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடவுள்ளதால் ஐபிஎல் தொடரில் விராட் கோலி ரன் குவிப்பதில் தீவிரமாக இருப்பாரா என ஐஐடி மாணவர்கள் கேள்வி எழுப்பினர். மாணவர்களின் இந்த கேள்விக்கு சுனில் கவாஸ்கர் பதிலளித்ததாவது: அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? அவர் சில காரணங்களுக்காக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறார். அவர் ஐபிஎல் தொடரிலும் கூட விளையாடாமல் இருக்க வாய்ப்புள்ளது என்றார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய விராட் கோலி, அண்மையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து