முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் : நீலகிரியில் நிர்மலா சீதாராமன் பேச்சு

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      தமிழகம்
Nirmala-Seetharaman 2023-04-27

Source: provided

திருப்பூர் : பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் என்று நீலகிரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

அவிநாசியில் மங்கலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எல். முருகனை ஆதரித்தும், மகளிர் சுய உதவிக்குழுவினருடான கலந்துரையாடல் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, 

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் நலத்திட்டங்கள் வருமா என்று சந்தேகம் இருந்த நிலையில், இன்றைக்கு நமக்கும் வரும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.   வீட்டுக்கு தேவையான கழிவறை, குடிநீர் குழாய், கான்கிரீட் வீடு என ஏழை மக்களுக்கான திட்டங்களை தீட்டி வருகிறார் பிரதமர் மோடி. சுய உதவிக்குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், அந்தப் பெண்களுக்கு ஏதோவொரு வகையில் உதவுகிறார் பிரதமர் மோடி.

என் குடும்பம் எப்படியாவது வாழ வேண்டும். குடும்ப அரசியல் என்று என்னை திட்ட வேண்டாம். ஆனால், மக்கள் ஆதரவு தருகிறார்கள். மக்களை அவமானப்படுத்த வேண்டாம் என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், இந்த நாட்டு மக்கள்தான் என் குடும்பம் என்கிறார் மோடி.

பின் தங்கிய வகுப்பை மத்திய அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். பாராளுமன்றத்தை மட்டும் மோடி கட்டவில்லை. ஒவ்வொருவருக்கும் வீடு கட்டித் தருகிறார். மின்சாரம், கேஸ் இணைப்பு இருக்கிறதா என மோடி பார்க்கிறார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் படுகர்கள் ஏராளமானோர் உள்ளனர். தி.மு.க.வில் எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருக்கும் ஒத்துப்போவதில்லை. காரணம், அங்கிருக்கும் சாதி தான். ஆனால், எல்.முருகனின் டெல்லி வீட்டுக்கு சென்று பிரதமர் மோடி பொங்கல் விழாவில் பங்கேற்றார்.

பெண்களை முன் நிறுத்தி திட்டம் வகுக்கிறார் பிரதமர் மோடி. பூச்சி மருந்தை டிரோன் மூலம் பயிர்களுக்கு இன்று வயலில் தெளிக்க முடியும். மகளிர் சுய உதவிக்குழு பெண்களை அழைத்து வந்து பயிற்சி அளித்து, அவர்களுக்கு தேவையான ஊக்கத் தொகை, டிரோன் வாங்க கடனும் வந்து விடும் என விவசாயத்தில் புரட்சி செய்யக்கூடிய அளவுக்கு, பெண்கள் கையில் தந்தவர் பிரதமர் மோடி. 

இன்றைக்கு கிராமங்களில் டிரோனை இயக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கிடைக்கிறது. பாரதி கண்ட புதுமைப் பெண்ணை இன்றைக்கு பிரதமர் மோடி மூலம் பார்க்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் இன்றைக்கு சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். 

தன்மானத்தோடு லட்சங்களில் பெண்கள் கிராமங்களில் சம்பாதிக்க திட்டம் தீட்டுகிறார் பிரதமர் மோடி. தமிழக அரசு பெண்களை எப்படி நடத்துகிறது என்பதையும் சொல்ல வேண்டும். தகுதி உள்ள பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குகிறது மாநில அரசு. சென்னை மாநகராட்சி பெண் மேயர் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாகிறார் என்பதை நாம் வீடியோ பதிவுகளில் பார்க்கிறோம்.

அந்தக் கட்சியால் திராவிட சொந்தங்கள் கட்டுக்குள் வைக்கச் சொல்ல முடியுமா? போதையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமிழகத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து