முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      தமிழகம்
Rahul 2024-04-15

நீலகிரி, நீலகிரி மாவட்டத்தில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதற்காக மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட தமிழ்நாட்டின் எல்லை பகுதியான தாளூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் தரையிறங்குகினார்.

இந்நிலையில் நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகள் ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சோதனை செய்தனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சோதனை நிறைவடைந்ததை அடுத்து அங்கிருந்து செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்துக்கு சென்றார் ராகுல் காந்தி.  இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை அவர் சந்தித்தார்.  பின்னர் வயநாடு புறப்பட்டு செல்லும் அவர் சுல்தான் பத்தேரி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து