எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாட்னா, இண்டியா அணிக்கு தொலைநோக்குப் பார்வையோ, நம்பிக்கையோ இல்லை. அவர்களிடம் எந்த சாதனையும் இல்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பீகாரின் கயா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,
பா.ஜ.க.வின் உறுதிமொழிப் பத்திரம் (தேர்தல் அறிக்கை) இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. சில கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை கேரண்டி கார்டு என அழைப்பது இதுவே முதல் முறை.
நமது அரசியலமைப்புச் சட்டம் தூய்மையானது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வளமான இந்தியாவை உருவாக்க கனவு கண்டனர். ஆனால், நாட்டில் பல தசாப்தங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான வாய்ப்பை தவற விட்டது.
பா.ஜ.க. தலைமையிலான அரசு எந்த ஒரு வாய்ப்பையும் தவற விடவில்லை. அதன் காரணமாகத்தான், நாட்டில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மோடியின் உத்தரவாத அட்டை(கேரண்டி கார்டு) அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு மூன்று கோடி வீடுகள் கட்டித் தரப்படும். ஏழைகளுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இலவச ரேசன் வழங்கப்படும். 70 வயது நிரம்பியவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் பிரதமர்-கிசான் சம்மன் நிதி தொடரும். இவை அனைத்தும் மோடியின் கேரண்டிகள்.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும், ஒவ்வொரு துறைக்கும் ஒரு திட்ட வரைபடம் உள்ளது. இளைஞர்கள் வேலை தேடி வெளியே செல்ல வேண்டியதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது.
நாட்டில் 10 கோடி பெண்கள் சுயஉதவி குழுக்களுடன் இணைந்துள்ளனர். பீகாரில் 1.15 கோடி பெண்களும், கயாவைச் சேர்ந்த 5.15 லட்சம் பெண்களும் சுயஉதவி குழுக்களுடன் இணைந்துள்ளனர். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோது, பீகார் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.150 கோடிக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் இந்தக் குழுக்களுக்கு ரூ.40,000 கோடிக்கு மேல் நிதி வழங்கியுள்ளது. வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் எங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளன. இண்டியா அணிக்கு தொலைநோக்குப் பார்வையோ, நம்பிக்கையோ இல்லை. அவர்களிடம் எந்த சாதனையும் இல்லை. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் செய்த பணிகளைச் சொல்லித்தான் அவர்கள் வாக்கு கேட்கிறார்கள்.
நிதிஷ் குமாரும், மத்திய அரசும் செய்த மக்கள் நலத் திட்டங்களுக்கு இண்டியா அணியினர் ஏன் உரிமை கோருகிறார்கள் என்பது ஒட்டுமொத்த பீகாருக்கும் தெரியும். பீகாரில் பல ஆண்டுகளாக ஆர்.ஜே.டி ஆட்சி செய்துள்ளது. ஆனால் அவர்களின் அரசு செய்த பணிகளை விவாதிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை. பீகாரில் காட்டாட்சியின் மிகப்பெரிய முகமாக ஆர்.ஜே.டி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 days ago |
-
தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அனுமதி
31 May 2025சென்னை : தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
-
இந்தியா 'ஏ' - இங்கி., லயன்ஸ் முதல் டெஸ்ட்: கருண் நாயர் இரட்டை சதம்
31 May 2025கேன்டர்பரி : இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார்.
-
இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா? - முப்படை தலைமை தளபதி விளக்கம்
31 May 2025புதுடில்லி : பாகிஸ்தான் மீதான போரில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு முப்படை தலைமை தளபதி விளக்கமளித்துள்ளார்.
-
பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு: செவிலியர் மீது வழக்குப்பதிவு
31 May 2025வேலூர் : வேலூரில் செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்? பயணிகள் புகார்
31 May 2025சென்னை : வந்தே பாரத் ரயிலில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரயில்வே நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
தலைமை ஹாஜி மறைவு: எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்
31 May 2025சென்னை : தமிழக அரசின் தலைமை ஹாஜி வீட்டுக்கு நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
-
இந்திய மகளிர் அணிக்கு வெள்ளி
31 May 202526-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது.
-
ஹர்திக் பாண்ட்யாவுடன் மோதலா..? - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கில்
31 May 2025முல்லான்பூர் : ஹர்திக் பாண்ட்யாவுடன் மோதல் என்ற சர்ச்சை செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்
-
மும்பை - குஜராத் இடையேயான பிளே ஆப் சுற்று போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
31 May 2025முல்லான்பூர் : மும்பை - குஜராத் இடையேயான ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று போட்டியில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
-
வெற்றிக்கு காரணம் பும்ரா: கேப்டன் ஹர்திக் பாண்ட்யா
31 May 2025முல்லான்பூர் : ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் சிக்கன பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா தான் வெற்றிக்கு காரணம் என்று மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பா
-
ஒரே போட்டியில் ரோகித் 3 சாதனைகள்
31 May 2025முல்லான்பூர் : ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
-
தனக்குத் தானே கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம்
31 May 2025சென்னை : 40 வயதில் தனக்குத் தானே கட்டிய கல்லறையில், நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.;
-
பிளே ஆப் சுற்று போட்டியில் அதிக ரன்கள்: மும்பை-குஜராத் அணிகள் இணைந்து புதிய சாதனை
31 May 2025முல்லான்பூர் : பிளே ஆப் சுற்று போட்டியில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் என்ற சாதனையை மும்பை - குஜராத் அணிகள் இணைந்து படைத்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-06-2025
01 Jun 2025 -
வார ராசிபலன்
31 May 2025 -
முதல்போக பாசனத்துக்காக முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு
01 Jun 2025குமுளி : கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக பாசனத்துக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் நேற்று (ஜூன் 1) தண்ணீரை திறந்து வைத்தார்.
-
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
01 Jun 2025மேட்டூர் : மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த 3 அலகுகளில், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.