முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      சினிமா
Vishal 2024-04-19

Source: provided

சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் மற்றும் அரசியல், திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமுடன் சென்று வாக்களித்தனர்.  

திரைப் பிரபலங்களைப் பொறுத்தவரை அஜித் தொடங்கி ரஜினி, விஜய், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, கார்த்தி, வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். அந்த வகையில் நடிகர் விஷால் சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

முன்னதாக, அவர் கருப்பு டி-சர்ட் அணிந்து கொண்டு, சைக்கிளில் சென்று வாக்களித்தார். அவர் சைக்கிளில் செல்லும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய் திடீரென சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்தார். இது பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை குறிக்கும் வகையில் அவர் இப்படி செய்ததாக பலரும் கூறிய நிலையில், அதற்கு அறிக்கை வெளியிட்டு விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்தது. தற்போது விஷாலும் விஜய் பாணியில் சைக்கிளில் சென்று வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து