முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’  என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை கௌரவிப்பதற்காக உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,  புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.  அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“புதிய உலகத்திற்கான திறவுகோல் – அறிவின் ஊற்று – கல்விக்கான அடித்தளம் – சிந்தனைக்கான தூண்டுகோல் – மாற்றத்திற்கான கருவி – மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை! புதிய உலகத்திற்கான திறவுகோல் – அறிவின் ஊற்று – கல்விக்கான அடித்தளம் – சிந்தனைக்கான தூண்டுகோல் – மாற்றத்திற்கான கருவி – மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை!

புத்தகங்களை வாசியுங்கள் – நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க… புத்தகங்களை வாசியுங்கள் – நேசியுங்கள்;  பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்! புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல்,  பல மாணவர்களுக்கும் – நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.  கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து