முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக சூசன் வைல்ஸ் : டொனால்டு டிரம்ப் நியமித்தார்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      உலகம்
Trump 2024-11-08

Source: provided

வாஷிங்டன் : தன்னுடைய தேர்தல் பிரச்சார குழுவின் மானேஜராக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக டிரம்ப் நியமித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக அமெரிக்க அதிபராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.  

இந்த நிலையில் டிரம்ப் , தனது வெற்றி உரையின்போது ஜே.டி. வின்ஸை துணை அதிபராக அறிவிப்பதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தன்னுடைய தேர்தல் பிரசார குழுவின் மானேஜராக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார். இந்த பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா வரலாற்றில் மிகப் பெரிய அரசியல் வெற்றியை நான் பெறுவதற்கு சூசன் வைல்ஸ் மிகவும் உதவியாக இருந்தார். என்னுடைய 2016 மற்றும் 2020 வெற்றிகரமான பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர் இருந்தார். 

அவர் கடினமானவர். புத்திசாலி, புதுமையானவர். அத்துடன் உலகளவில் போற்றப்படுகிறவர். மதிக்கப்படுகிறவர் என  டிரம்ப் தெரிவித்துள்ளார். 

மேலும், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற சூசன் தொடர்ந்து அயராது உழைக்கிறார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசன் இருப்பது மிகவும் தகுதியான மரியாதை. அவர் நம் நாட்டைப் பெருமைப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து