Idhayam Matrimony
முகப்பு

வாந்தி குமட்டலை தடுப்பது எப்படி

  1. வாந்தி மற்றும் குமட்டல் ஏன் வருகிறது என்பதையும் அதை எப்படி தடுக்கலாம் என்பதனையும் காணலாம்.
  2. குமட்டல் என்பது ஒரு ஒவ்வாமை ஆகும்,வாந்தி என்பது வேறு குமட்டல் என்பது வேறு.
  3. நமது மனம் மற்றும் உடலுக்கு பிடிக்காத மற்றும் அழுகிய பொருட்களை பார்த்தாலும் அதனை நுகர்ந்தாலும் குமட்டல் வருகிறது 
  4. இது ஒரு நோய் கிடையாது ஒவ்வாமை ஆகும்.
  5. நம் சாப்பிடும் போது ஓரு குமட்டல் வரும் அது தான் நமது ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதை நமக்கு உணர்த்துகிறது.
  6. தேவைக்கு மேல் அதிகமான உணவுகளை சாப்பிடுவதாலும் உணவு ஜீரணமாகும் முன் மீண்டும் உணவு சாப்பிடுவதும் இதற்கு காரணமாக அமைகிறது.
  7. ஜீரணமாகும் முன் நாம் அதிக உணவு சாப்பிடுவதை குமட்டல் மூலமாக நமது உடல் நமக்கு ஓரு எச்சரிக்கையை தருகிறது,என்பதனை நம் உணர வேண்டும்.
  8. நாம் சாப்பிடும் பொருளை உடல் ஏற்று கொள்வதில் கல்லிரல் மற்றும் மண்ணீரலுக்கு அதிக பங்கு உள்ளது.
  9. கெட்டு போன பொருளை வெளியேற்றுவதற்கு கல்லிரலும், மண்ணீரலும் செயல்பட்டு வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்துகிறது.
  10. உடலில் நீர் சத்து குறைந்தாலும்,கூடினாலும் குமட்டல் மற்றும் வாந்தி வருகிறது.
  11. பயணம் செய்யும் போது வரும் அதிக அளவு காற்று கூட சிலருக்கு வாந்தியை ஏற்படுத்துகிறது.
  12. பயணங்களின் போது ஏற்படும் குமட்டல் வாந்தியை சரி செய்ய எலுமிச்சம் பழ சாறில் சர்க்கரை அல்லது உப்பு போட்டு சாப்பிட்டால் வாந்தி சரியாகும்.
  13. சர்க்கரை நோய் உள்ளவர்கள் எலுமிச்சம் பழ சாறில் உப்பு சேர்த்தும்,மற்றவர்கள் சர்க்கரை சேர்த்தும் சாப்பிட்டு பயன் பெறலாம்.
  14. சர்க்கரை நோய் உள்ளவர்கள் 20 மில்லி எலுமிச்சம் பழ சாறில் கொஞ்சம் கூடுதல் உப்பு சேர்த்து உடன் சிறிதளவு சிரகப்பொடியை சேர்த்து 200 மில்லி தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் வாந்தி சரியாகும்.
  15. பயணத்தின் போது மற்றும் அதிக உணவு எடுத்துக்கொண்ட பின்னர் வரும் குமட்டல் மற்றும் வாந்தியை சரி செய்ய எலுமிச்சம் பழ சாறை பயன்படுத்தலாம்.
  16. எனினும்,எலுமிச்சம் பழ சாறை தொடந்து பயன் படுத்தும் போது அல்சர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அருந்துவது நல்லது.
  17. உணவுகளை தேவையான அளவு மட்டும் சாப்பிட வேண்டும்,சாப்பிடும் உணவுகளையும் 32 முறை நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் வாந்தி மற்றும் குமட்டலை தடுக்கலாம்.
  18. பொறுக்கும் அளவு சூடான தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து தொண்டை வரை வாய் கொப்பளித்து வந்தால் வாந்தி மற்றும் குமட்டலை தடுக்கலாம்.
  19. நாம் எந்த பொருளை சாப்பிட்டாலும் வாந்தி வந்தால்,உடனே ஓரு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது நல்லது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago