எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அரசியலடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன், தோழமை கட்சிகளோடு இணைந்து உருவாக்கிய தி.மு.க. கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்றம் அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது; என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம். அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் அவை நிகழ்கின்றன. நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ ஊடகத்தளங்களில் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். அதாவது, அரசியலடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம்.
அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் ஆளுங்கட்சி தி.மு.க. தலைமையிலான "மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்" இடம் பெற்றிருப்பது ஒரு காரணம். அதுவே முதன்மையான காரணமாகும். இக்கூட்டணியைச் சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர். அவர்கள் யாவரென கேள்வி எழுவது இயல்பேயாகும். குறிப்பாக, தி.மு.க.'வைப் பிடிக்காதவர்கள், தி.மு.க. கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள் தாம். இவர்களில் கட்சி அடையாளமில்லாத ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உள்ளனர்.
தற்போது, த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய்யோடு நாம் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்கிற தோற்றத்தை உருவாக்கிட முனைகின்றனர். அவர் அண்மையில் அவரது மாநாட்டில் ஆற்றிய உரையில் தம்மோடு இணையவிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்தார்.
அவரது உரையை நாம் கண்டும் காணாமல் கடந்து போயிருக்கலாம். ஆனால், "வழியில் காலை நீட்டி வம்புக்கு இழுப்பவர்கைள" எப்படி நாம் கடந்துபோவது? அவர்களுக்கு விடை சொல்லவேண்டும் என்பதைவிட, என் உயிரின் உயிராய் எனக்குள் இயங்கும் உங்களுக்கு நமது கட்சியின் நிலை குறித்து ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டியது தவிர்க்க இயலாத தேவையாகிறது.
ஆகவே தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க.வுடன், தி.மு.க. தலைமை வகிக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் கொண்டிருக்கிற அரசியல் உறவு தொடர்பாக விளக்கிட வேண்டிய நெருக்கடி எழுந்தது. அதாவது, ஏற்கனவே நாம் ஒரு வலுவான கூட்டணியில் இருக்கிறோம். அதனை நிறுவிய ஓர் உறுப்பியக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. எனவே, நமக்கு அதனைவிட்டு வெளியேறும் தேவை ஏதுமில்லை என்பதையும் அவ்வறிக்கை மற்றும் நேர்காணல்கள் மூலம் தெளிவுப்படுத்தினோம். தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்!இதனை யார் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் தெளிவுற புரிந்துகொள்ள வேண்டும். குழப்பம் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று 9-ம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
04 Dec 2025சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று மெரினா கடற்கரையில் 'உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்த 28 லட்சம் பேருக்கு கூடுதலாக மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் 12-ம் தேி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
04 Dec 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்த 28 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் டிச.12ம் தேதி முதல்வர் மு
-
அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் விராட் கோலி முதலிடம்
04 Dec 2025ராய்ப்பூர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
04 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு பா.ம.க. அழைப்பு
04 Dec 2025சென்னை, பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்துள்ளது.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப்பணிக்கு தடை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு
04 Dec 2025சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிக்கு தடை நீட்டிக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கி மீண்டும் பதிவிட்ட செங்கோட்டையன்
04 Dec 2025கோபிசெட்டிபாளையம், எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கிய நிலையில் செங்கோட்டையன் மீண்டும் அதே பதிவை பதிவிட்டுள்ளார்.
-
ஏ.வி.எம்.சரவணனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி: எல்லோரிடமும் அன்பாக பழகியவர் என புகழஞ்சலி
04 Dec 2025சென்னை, ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல சினிமா பட தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.
-
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை - தமிழ்நாடு அரசு வாதம்
04 Dec 2025திருப்பரங்குன்றம், தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வாக்காளர்கள் பட்டியலில் இருந்து தமிழகத்தில் 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு
04 Dec 2025சென்னை, தற்போது நடத்தப்பட்ட சிறப்பு திருத்த பணிகள் மூலம் 77 லட்சத்து 52 ஆயிரத்து 529 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
04 Dec 2025மதுரை, கவின் ஆணவப்படுகொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
வரும் 9-ம் தேதி புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. மனு
04 Dec 2025புதுச்சேரி, ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டிச.9-ல் புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி எஸ்எஸ்பியிடம் த.வெ.க.வினர் நேற்று மனு அளித்துள்ள
-
தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்: பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தல்
04 Dec 2025புது தில்லி, ‘தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை முயற்சிகளைக் கண்டு வியப்படைந்தேன்.
-
டெல்லி காற்றுமாசு விவகாரம்: பார்லி., வளாகத்தில் முகக்கவசம் அணிந்து எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
04 Dec 2025டெல்லி, டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்பட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு
04 Dec 2025சென்னை, தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்ளிட்ட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
04 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 5,141 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,619 கன அடியாக சரிந்துள்ளது.
-
ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக பயணம் துவக்கம்
04 Dec 2025ராமேசுவரம், நாகை, மயிலாடுதுறையில் இருந்து ஆன்மிக பயணத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.;
-
சபரிமலையில் 15 லட்சத்தை கடந்த பக்தர்களின் வருகை
04 Dec 2025பத்தனம்திட்டா, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விவகாரம்: பிரதமர் நரேந்திரமோடி விளக்கமளிக்க மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
04 Dec 2025புதுடெல்லி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
-
டெல்லி காற்று மாசுபாடு விவகாரம்: நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு: சோனியா காந்தி
04 Dec 2025புதுடெல்லி, டெல்லி காற்று மாசுபாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு என சோனியா காந்தி கூறினார்.
-
பா.ம.க.வின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து
04 Dec 2025டெல்லி, அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என பா.ம.க. வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் பிரதமர் மோடி நேரில் வரவேற்பு
04 Dec 2025புதுடெல்லி, 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின். அவரை விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி நேரில் வரவேற்றார்.
-
மதீனா-ஐதராபாத் விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்
04 Dec 2025காந்திநகர், மதீனா - ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க மறுப்பு: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
04 Dec 2025புதுடெல்லி, வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் அவர்களை எதிர்க்கட்சி தலைவர் வந்திப்பது வழக்கம் என்று தெரிவித்துள ராகுல் காந்தி ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க அனுமதி மறுக்க
-
அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிபர் ட்ரம்ப்: வீடியோ இணையத்தில் வைரல்
04 Dec 2025வாஷிங்டன், அமைச்சரவை கூட்டத்தில் தூங்கிய ட்ரம்ப் வீடியோ இணையத்தில் வைரல்லானது.


