எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை பேட்டிங்...
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று (ஏப். 22) நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.
திலக் வர்மா...
ஆரம்பம் முதலே ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் திணறினர். ரோஹித் சர்மா 6ரன்களுக்கு ஆட்டமிழக்க, இஷான் கிஷன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா மட்டும் நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். திலக் வர்மா 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த வந்த வீரரான நேஹல் வதேரா 49ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
180 ரன்கள் இலக்கு...
20ஓவர்களின் முடிவில் 9விக்கெட்கள் இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, திலக் வர்மா 45 பந்துகளில் 65 ரன்களை விளாசினார். நேஹால் வதேரா 24 பந்துகளில் 49 ரன்களை எடுத்தார். இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 18. 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை விளாசினர். அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 104 ரன்களை குவித்தார். சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். ஜோஸ் புட்டலர் 25 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார்.இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து முதலிடம்....
இதுவரை 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் தோல்வி மற்றும் ஏழு போட்டியில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது இடத்தை தக்க வைத்துள்ளது. அதேபோல 8 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 3போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6புள்ளிகளைப் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.
சஞ்சு சாம்சன் பேட்டி...
வெற்றி பெற்ற பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது., இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதற்கான அனைத்து வாழ்த்துகளும் எங்கள் அணியின் அனைத்து வீரர்களையுமே சேரும். பந்துவீச்சின் போது பவர்பிளே ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் மிடில் ஓவர்களில் இடது கை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திவிட்டனர். ஆனால் நாங்கள் திரும்பி வந்ததுடன் இந்த வெற்றியையும் பதிவு செய்துள்ளோம்.
ஓய்வு கிடைக்கும்...
நாங்கள் பேட்டிங் செய்ய வரும்போது மைதானம் மெதுவாக இருந்தாலும், விளக்குகளின் வெளிச்சத்தால் விளையாடும் போது அது பேட்டிங்கிற்கு சாதமாக அமைந்தது. தொழில்முறை வீரர்கள் தங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு யாரிடமிருந்தும் அறிவுரைகள் தேவையில்லை என நினைக்கிறேன். அவர் மிகவும் நம்பிக்கையான வீரர். இவ்வாறு அவர் கூறினார்.
ஹர்திக் பாண்ட்யா...
இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் மும்பை கேப்டன் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆரம்ப கட்டத்தில் நாங்களே சில தவறுகளை செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டோம்.ஆனால் திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை சேர்த்தார்கள். எனினும் நாங்கள் நல்ல முறையில் பேட்டிங்கை முடிக்கவில்லை குறைந்தது. 10 - 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். இதே போன்று பந்துவீச்சிலும் ஸ்டம்ப்க்கு குறி வைத்து பந்து வீசி இருக்க வேண்டும். நாங்கள் பவர் பிளேவில் அடிப்பதற்கு ஏதுவாக பந்துகளை வீசி விட்டோம். நிச்சயமாக இது எங்களுடைய சிறந்த நாள் கிடையாது. நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை இன்று மைதானத்தில் வெளிப்படுத்தவில்லை. எங்கள் அணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அது அவர்களுக்கு தெரியும்.
உடன்பாடு இல்லை...
நாங்கள் செய்யும் தவறிலிருந்து திருத்திக் கொள்ள வேண்டும். திரும்ப செய்யக்கூடாது. எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கிறது. அது குறித்து அவர்கள் உழைக்க வேண்டும். எங்கள் அணியில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என ரசிகர்கள் கேட்கிறார்கள்.ஆனால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவளிக்க விரும்புகிறேன். அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது குறித்துதான் கவனம் செலுத்துகிறோம். எங்கள் அணியில் உள்ள திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


