முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      தமிழகம்
Mettur-dam-2024-04-24

சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 120 அடி. மொத்த நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகும். மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு பண்ணவாடி, கோட்டையூர் பகுதியில் வாழ்ந்து வந்த கிராம மக்கள் அணையின் நீர்த்தேக்க பகுதியில் கோவில்களை கட்டி வழிபாடு நடத்தி வந்தனர்.

அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு கிராம மக்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தனர். இதில் 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும் போது பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருக்கும் நந்தி சிலையின் தலைப்பகுதி, கிறிஸ்துவ ஆலயத்தின் முகப்பு பகுதி வெளியே தெரிவது வழக்கம். 

இந்நிலையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது. மேலும் நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் கோபுரத்தில் மேல் பகுதி நீருக்கு வெளியே தெரிய தொடங்கி உள்ளது. 

இதனை சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பரிசல் மூலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.66 அடியாகவும், நீர் இருப்பு 20.87 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து