முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      இந்தியா
Air-India 1

புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவுறுத்தியுள்ளது.

உலகில் விமான போக்குவரத்து வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியாவில், உள்நாட்டு விமான போக்குவரத்தும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விமானங்களில் பயணிக்கும் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் இருக்கை ஒதுக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது., “விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் இருக்கை  ஒதுக்கப்படுவதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் அதற்கான பதிவேடு பராமரிக்கப்படும். இவ்வாறு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை வழங்கி உள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் பூஜ்ஜிய சாமான்கள், முன்னுரிமை இருக்கைகள், உணவு, பானங்கள் மற்றும் இசைக்கருவிகளின் வண்டி போன்ற சேவைகளுக்கான கட்டணங்களையும் அனுமதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து