முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      தமிழகம்
Udayanidhi-1 2023-10-1

சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

தமிழகத்தின் அரசியல் போக்கை நிரந்தரமாக மாற்றியமைத்த வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாள். ஒரு நூற்றாண்டுக்கு முன்பே  திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர். கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இடம்பெற வழிவகுத்த திராவிட இனத்தின் கம்பீரத் தலைவர்.

வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் சமூகநீதிப் பணிகளை என்றென்றும் நினைவுகூர்வோம். தியாகராயர் புகழ் ஓங்கட்டும். இவ்வாறு அந்த பதிவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து