முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சிக்கு வந்ததும் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி தகவல்

வியாழக்கிழமை, 9 மே 2024      இந்தியா
Rahul-Gandhi-2023-04-13

புதுடில்லி, 'இன்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்' என எக்ஸ் சமூகவலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

வீடியோவில் ராகுல் பேசியதாவது., பிரதமர் மோடியின் பொய் பிரசாரங்களில் கவனம் சிதறாமல் உறுதியாக இருங்கள். பிரதமர் பதவி தன் கையை விட்டுப்போகிறது என்ற பயத்தில் மோடி இருக்கிறார். இன்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் ஆட்சேர்ப்புப் பணிகளைத் துவங்குவோம். பணமதிப்பிழப்பு, தவறான வரி நடைமுறைகளை பிரதமர் மோடி புகுத்தினார். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியது பொய்யானது. நாங்கள் சொல்வதைக் கேளுங்கள், வெறுக்காதீர்கள், ஒரு வேலையைத் தேர்ந்தெடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து