முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      விளையாட்டு
Hardick-pandya

Source: provided

புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில்...

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. 9-ம் தேதி பாகிஸ்தானுடனும், 12-ம் தேதி அமெரிக்காவுடனும், 15-ம் தேதி கனடாவுடனும் மோதுகிறது.

ஆலோசனை...

இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்திய டி-20 அணியும் அறிவிக்கப்பட்டது.  உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

துணை கேப்டன்...

இதற்கிடையே, அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் நேற்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்பட்டனர். இதையடுத்து, டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து