முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க கவர்னர் மீதான குற்றச்சாட்டு: விசாரிக்க 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

சனிக்கிழமை, 4 மே 2024      இந்தியா
Ananda-Bose 2024-05-03

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகாரை விசாரிக்க 8 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், தனக்கு கவர்னர் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறையிடம் புகார் அளித்தார். இது அந்த மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்று மேற்கு வங்க தொழில்துறை அமைச்சர் சசி பாஞ்சா வலியுறுத்தினார்.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு ‘பொய் நாடகம்’ என்று மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகாரை விசாரிக்க கொல்கத்தா காவல்துறை துணை ஆணையர் இந்திரா முகர்ஜி தலைமையிலான 8 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து