முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன் பிரதமரின் சொத்து மதிப்பு உயர்வு

சனிக்கிழமை, 18 மே 2024      உலகம்
Rishi-Akshada 2024-05-18

Source: provided

 லண்டன் : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்ட் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு 651 மில்லியன் பவுண்ட் ஆக அதிகரித்து உள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டில்  சண்டே டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: 

ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 529 மில்லியன் பவுண்ட் ஆக இருந்தது. இந்த ஆண்டு 651 மில்லியன் பவுண்ட் ஆக அதிகரித்துள்ளது. இன்போசிஸ் பங்குகள் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த தம்பதியின் சொத்து மதிப்பு அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயணமூர்த்தியின் மகள் தான் அக்ஷயா மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து