முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்

சனிக்கிழமை, 18 மே 2024      தமிழகம்
Metro-train 2023 05 02

Source: provided

சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற வற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

இதனால் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில்  ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ரூ.100 செலுத்தி சுற்றுலா அட்டை பெற்று மெட்ரோவில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம். ரூ.150 செலுத்தி ரூ.100 சுற்றுலா அட்டை பெற்று திருப்பி செலுத்தியவுடன் ரூ.50 வைப்பு தொகை தரப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து