முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      தமிழகம்
RBU 2023-08-22

Source: provided

மதுரை : அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர்செல்வம். தனக்குப் பதவி இல்லை என்பதால் அ.தி.மு.க.வை பிரிக்க திட்டமிட்டார். கட்சியின் முக்கியத்துவம், நலன் கருதி ஓ.பி.எஸ் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கப்பட்டார். அ.தி.மு.க.வின் முக்கிய முடிவுகளில் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மௌனம் காப்பார்.

ஓ.பி.எஸ்.-ன் நடவடிக்கைகளால் அ.தி.மு.க. வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி பெற்றது அ.தி.மு.க.வின் வெற்றி. ஓ.பி.எஸ்-ன் வெற்றி அல்ல. இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்ட ஓ.பி.எஸ்.சை எந்த வகையில் ஏற்க முடியும்?. அ.தி.மு.க.வை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஓ.பி.எஸ் ஈடுபட்டார்.

பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்பு ஓ.பி.எஸ்.-ஐ, அ.தி.மு.க.வில் சேர்க்க திட்டம் என ஊடகங்கள் எந்த ஒரு ஆதாரமின்றி செய்தி வெளியிடுகிறது. அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை.

தொண்டர்களின் எண்ணத்தின் அடிப்படையில் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்தி செல்கிறார். எந்த காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைக்கப் போவதில்லை என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு சொல்கிறேன். ஓ.பன்னீர் செல்வம் என்னும் தனிமனிதனின் சுயலாபத்திற்காக இவ்வளவு வழக்குகள் அ.தி.மு.க. மீது போடப்பட்டது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து