முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மியின் வங்கி கணக்குகள் தேர்தலுக்குப்பின் முடக்கப்படலாம் : அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
Kejriwal 2024-02-17

Source: provided

புதுடெல்லி : தேர்தலுக்குப்பின் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் பா.ஜ.க.வால் முடக்கப்படலாம் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். 

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமார் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்தது. இதனையடுத்து இதுகுறித்து கெஜ்ரிவால் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில், நான் உள்பட மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரையும் சிறையில் அடைத்தனர். தற்போது எனது உதவியாளரையும் சிறையில் அடைத்துள்ளனர். இப்போது ராகவ் சதா, அதிஷி, சௌரப் பரத்வாஜ் ஆகியோரை சிறையில் அடைப்போம் என்று கூறுகிறார்கள். ஆம் ஆத்மி கட்சியினர் அத்தனை பேரையும் சிறையில் தள்ள முயற்சிக்கிறார் மோடி என தெரிவித்துள்ளார்.  

 இந்நிலையில், டெல்லி ஆம் ஆத்மி அலுவலகத்திற்கு நேற்று சென்ற கெஜ்ரிவால் கூறியதாவது, 

ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை அடுத்தடுத்து கைது செய்ய பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. எங்களை அலுவலகத்தில் இருந்து விரட்டி தெருவுக்கு கொண்டு வருவதே அவர்களின் நோக்கம். சில நாட்களில் ஆம் ஆத்மி கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று அமலாக்கத்துறையின் வழக்குரைஞர் முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இப்போது எங்கள் கணக்கை முடக்கினால் எங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்பதால், தேர்தல் முடிந்தவுடன் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் முடக்குவார்கள். இவைதான் பா.ஜ.க.வின் திட்டங்கள். நாம் பெரிதாக வளர்ந்து, அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியாக மாறக்கூடாது என்பதற்காக, ஆபரேஷன் ஜாதுவை பா.ஜ.க. துவக்கியுள்ளது. ஆபரேஷன் ஜாது மூலம், ஆம் ஆத்மி கட்சியின் பெரிய தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து