முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் இருக்காது : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்

திங்கட்கிழமை, 20 மே 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் இருக்காது என்றும் திட்டவட்மாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருவதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, “சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை, காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராகத்தான் பேசுகிறேன் என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது, அதைத்தான் நான் கூறி வருகிறேன். பாஜக சிறுபான்மையினருக்கு எதிராக இருக்காது, இப்போது மட்டுமல்ல வரும் காலங்களிலும்கூட.

கர்நாடகத்தில் அனைத்து முஸ்லிம் மக்களையும் ஓபிசி பிரிவுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வர காங்கிரஸ் முயற்சிக்கிறது. நமது அரசியல் சாசனத்தில் உள்ள மதச்சார்பின்மை உணர்வை தங்களின் தேர்தல் அரசியலுக்காக அழித்தவர்கள் இவர்கள்தான் என்று நான் நம்புகிறேன். அரசியலமைப்பின் உணர்வை மீட்டெடுக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவு குறித்து பேசிய பிரதமர் மோடி, “2019 தேர்தல் முடிவுகளின்படி, தென் மாநிலங்களிலும் பாஜகதான் பெரிய கட்சி, இந்த முறையும் நாங்கள்தான் பெரிய கட்சியாக வருவோம், கூட்டணிக் கட்சிகள் கூடுதல் பலம் சேர்க்கும். தெற்கு, கிழக்கு உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கூடுதல் வெற்றிகளை பெறுவோம். காங்கிரஸ் கூட்டணி சில மாநிலங்களில் வெற்றிக் கணக்கை தொடங்கவே திணறிக் கொண்டுள்ளது. 400 தொகுதிகளை கைப்பற்றுவதே எங்கள் இலக்கு. 4-ஆம் கட்ட தேர்தல் முடிவில் எங்கள் மதிப்பீடு சரி என்பது உறுதியாகியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து