முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் சனாதனத்தை எதிர்க்கிறோம்: அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, 7 டிசம்பர் 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

சென்னை, “இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு. சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் இந்த அரசு அதை எதிர்க்கின்றது” என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (07.12.2025) சென்னை, மண்ணடி அருள்மிகு காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயிலின் 5 நிலை ராஜகோபுரத்தினை உயர்த்தும் திருப்பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை, பூங்கா நகரில் தமிழ்நாட்டு திருக்கோயில் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை 4 கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முதல்வரின் நல்வழிகாட்டுதலின்படி வரும் ஜனவரி மாதத்திற்குள் 4,000 திருக்கோயில்களின் குடமுழுக்கு நிறைவு செய்து இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய ஆன்மிக புரட்சியை அமைதியாக நடத்திக் கொண்டிருக்கின்றது,

இந்த அரசு பொறுபேற்ற பிறகு. உறுதித்தன்மை வாய்ந்த திருக்கோயில்கள், இராஜகோபுரங்கள் காலசூழ்நிலைக்கு ஏற்றார்போல் தரை மட்டம் உயர்ந்து இருக்கின்ற அளவில் அவற்றை இடித்து கட்டுவதற்கு பதிலாக பொதுப்பணித் துறையிடம் அனுமதி பெற்று, அதன் உறுதிதன்மையை உறுதி செய்த பின் தாழ்வாக இருக்கின்ற திருக்கோயில்களை உயர் நிலைக்கு (லிப்டிங்) கொண்டு வருகின்ற பணிகளை இந்து சமய அறநிலையத்துறை 25 திருக்கோயில்களில் மேற்கொண்டது.

அதில் 11 திருக்கோயில்களின் பணிகள் நிறைவுற்றுள்ளன. இதர 14 திருக்கோயில்களில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு திருக்கோயிலான வியாசர்பாடி, இரவீஸ்வரர் திருக்கோயிலை உயர்த்தும் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் அந்த அத்திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் இன்றைய தினம் முதற்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கி வைத்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் மேலும் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும், 2026 ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழகத்தை பொறுத்த அளவில் நான் பலமுறை சொல்லியது போல், ஜாதி, மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகின்ற ஆட்சி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்ற ஆட்சியாகும். பாரதிய ஜனதா கட்சியினர் வட மாநிலங்களில் வேண்டுமென்றால் அவர்கள் நினைத்த மாதிரியான காரியங்கள், செயல்பாடுகள் ஈடேரலாம். ஆனால் இங்கு அவர்களின் கனவு பகல் கனவாக தான் இருக்கும். இது ராமானுஜர் வாழ்ந்த மண். ஆகவே மத ஒழுக்கம், மத ஒற்றுமை பேணி காக்கப்படும். இது போன்ற செயல்களை நிச்சயம் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அனைத்து மக்களும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நண்பர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

சனாதனத்தை எவ்வளவு காலமானாலும் அழிக்க முடியாது என்று நயினார் நாகேந்திரன் அவர்கள் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டீர்கள், நாங்கள் எதையும் அழிக்க முயலவில்லை, எந்த ஒரு பொருளையும் மையப்படுத்தி மக்களை பிளவுபடுத்தக் கூடாது என்று தான் கூறுகிறோம். சமாதானம் என்பது மிக உயர்ந்த வார்த்தை. அனைத்து நிலையிலும் மக்களை சமமாக பார்ப்பது, ஆகவே இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு. சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றதால் அதை எதிர்க்கின்றது இந்த அரசு.

திருப்பரங்குன்றத்தில் இந்த பிரச்சனையை கையில் எடுத்த பிறகு லட்சக்கணக்கான மக்கள் அந்த கிரிவலத்தில் பங்கேற்று உள்ளார்கள். இந்த அரசு முழுமையான பாதுகாப்பை பக்தர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் கடையடைப்பு போராட்டம் என்று அறிவித்தார்கள். இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மக்களே திரண்டு அந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். விரோதி பட்டியிலில் இடம்பெற்று கொண்டே இருக்கின்ற தமிழ்நாட்டிலே இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சி இனிமேலாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

 

ஊடகங்கள் நெகட்டிவ்வான விஷயங்களை பற்றி பேசும்போது பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக் கூற வேண்டும். குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், அதற்காக வருந்த மாட்டோம், கோபப்பட மாட்டோம். குறைகளை நிவர்த்தி செய்வோம். காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு தங்கத் தேரை ஒப்படைத்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன். ஆறு கிலோ மீட்டர் தூரம் அந்த ரதம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடினாலும் லட்சக்கணக்கான மக்கள் கூடினாலும் அவர்களின் நலனை பாதுகாக்கும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு திகழும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து