Idhayam Matrimony

கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள்: திருப்பூரில் டி.டி.வி.தினகரன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 7 டிசம்பர் 2025      தமிழகம்
TTV 2025-09-06

திருப்பூர், கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள். உறுதியான முடிவு எட்டப்பட்ட பிறகு அறிவிப்பு வெளியிடப்படும்.

அ.தி.மு.க.வை அடுத்த நூற்றூண்டு வரை கொண்டு செல்ல வேண்டும் என்றால் நாம் ஓரணியில் இணைய வேண்டும் என்பதை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் உணர்ந்து வருகிறார்கள்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அந்த தேர்தல் கற்றுக்கொடுக்கும் பாடத்திற்கு பிறகு தூங்கிக் கொண்டிருப்பவர்களும், தூங்குவது போல் நடித்துக் கொண்டிருப்பவர்களும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட அதே சட்ட திட்டங்களுடன் கூடிய இயக்கத்தை உருவாக்குவதற்காக ஒருங்கிணைவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து