Idhayam Matrimony

வளர்ச்சி திட்டங்களை சகித்துக்கொள்ளாமல் சதி செய்கிறார்கள்: மதுரையில் பிரிவினையை உருவாக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

ஞாயிற்றுக்கிழமை, 7 டிசம்பர் 2025      தமிழகம்
Stalin 2022 12 29

மதுரை, வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியததால், சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது என்றும் எப்படி பந்து வீசினாலும் சிக்சர் அடிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமூகத்தை துண்டாடும் சதிச் செயலில் ஈடுபடுவது ஆன்மிகம் அல்ல. கேடு கெட்ட மலிவான அரசியல். வன்முறையை தூண்டக் கூப்பிட்டால், மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் . “ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண் இது. நாம் வளர்ச்சி அரசியலைப் பேசினால் அவர்கள் வேறு அரசியலைப் பேசுகின்றனர். நான் உறுதியாகச் சொல்கிறேன். அவர்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அவற்றை முறியடிப்போம். சிதைப்போம்.

இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கிட்ட அந்த பாட்சா எல்லாம் பலிக்காது. எதுவும் எடுபடாது. சில கட்சிகளுக்கு எப்போதும் கலவர சிந்தனைதான் இருக்கிறது. திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பிரிவினையை தூண்டி சமூகத்தை துண்டாடும் செயல்கள் உண்மையான ஆன்மிகம் அல்ல. வளர்ச்சி திட்டங்க்ளை சகித்துக்கொள்ளாமல் சதி செய்கிறார்கள். எப்படி பந்து வீசினாலும் சிக்ச்ர் அடிப்போம். பொட்டியில் சாம்பியன் நாங்கள்தான். மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது. பா.ஜ.க.வுக்கு தோதான அடிமைகள் சிக்கலாம், புதிய அடிமைகள், பழைய அடிமைகள் பி டீம் , சி டீம் உருவாகலாம். இறுதியில்சாம்பியன் ஆகப்போவது நாங்கள்தான் என்றார்.

தி.மு.க. வளர்ச்சி அரசியலை முன்னெடுக்க, எதிர்க்கட்சிகள் வேறு எதோ அரசியலை முன்னெடுக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் இன்னும் மதுரைக்கு வரவில்லை. மதுரையில் நடந்த கீழடி அகழாய்வை நிறுத்த முயன்றது மத்திய பா.ஜ.க. அரசு. தமிழ்நாட்டிற்கு நிதியை கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசு தமிழ் மீது வெறுப்புடன் நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து