எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மன்னார்குடி, மீண்டும் ஒரு சம்பவமாக மன்னார்குடியில் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கடந்த மாதம் (நவம்பர்) 24-ந் தேதி 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பயணிகள் உடல் நசுங்கி இறந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து கடந்த 31-ம் தேதி காரைக்குடி அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோட்டூர் பகுதியில் உள்ள வளைவில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும், மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்த தனியார் பேருந்தும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு திருத்துறைப்பூண்டி, திருவாரூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 பேருந்துகளின் முன்பகுதியும் நொறுங்கி பலத்த சேதம் அடைந்தன. குறிப்பாக இரு பேருந்துகளின் பக்கவாட்டு பகுதிகளும் சிதைந்து அவற்றின் ஓரம் இருந்த பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பேருந்துகள் அடுத்தடுத்த நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


