Idhayam Matrimony

தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பார்லி., வளாகத்தில் இன்டியா கூட்டணி கட்சிகள் போராட்டம்

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      இந்தியா      அரசியல்
India-2025-12-03

புதுடெல்லி, தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் இன்டியா கூட்டணி கட்சியை சேர்ந்து எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 3 நாட்ளுக்கு முன் தொடங்கியது. முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 2 அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று முன்தினமும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

பின்னர் பாராளுமன்ற இரு அவைகளிலும் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதனால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. அதன்பிறகு அவை கூடியபோது மீண்டும் அமளி ஏற்பட்டது. இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்தனர். இந்த முட்டுக்கட்டைக்கு தீர்வுகாண நேற்று மாலை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அதில், வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து 9-ந் தேதி விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்தன. 

இதில், தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்தது. இந்த சட்டங்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 3-ம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இன்டியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கார்ப்ரேட் காட்டாட்சி வேண்டாம், தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் என்ற பேனருடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து