முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் அர்ஜூன் மகள் திருமணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

சனிக்கிழமை, 25 மே 2024      தமிழகம்
CM-1 2024-05-25

Source: provided

சென்னை : நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

’ஆக்‌ஷன் கிங்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜூனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்தது.

அர்ஜூன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நடிகர் அர்ஜூனின் குடும்பமும். தம்பி ராமையாவின் குடும்பமும் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் நடிகர் அர்ஜூன் மற்றும் உமாபதி ராமையா ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து