முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகிறது பித்தல மாத்தி

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      சினிமா
Pithala-Maathi 2024-06-10

Source: provided

ஸ்ரீசரவணா பிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள "பித்தல மாத்தி" திரைப்படம் ஜூன் 14-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பாலசரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிகவித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும். ஸ்ரீசரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த கால காதலை மையப்படுத்தி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜூன் மாதம் 11-ம் தேதி உமாபதி ராமையாவின் திருமணம் நடைபெற உள்ளது. இதே மாதம் 14-ம் தேதி பித்தளை மாத்தி திரைப்படம் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து