முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசா போர் விவகாரம்: இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் திடீர் ராஜினாமா

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      உலகம்
Israel 2024-05-10

Source: provided

காசா : காசா போர் விவகாரத்தில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் கருத்து மோதலால் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சண்டையில் பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தாலும் இஸ்ரேல் அதனை கண்டு கொள்ளவில்லை.

ஹமாசை அழிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நுசிரத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். பொதுமக்கள் அதிகம் வசித்து வரும் இப்பகுதியில் சுரங்க பாதையில் இஸ்ரேல் பிணைக்கைதிகளை அடைத்து வைத்துள்ளதாக கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

சரமாரியாக குண்டுகள் வீசியதிலும், துப்பாக்கியால் சுட்டத்திலும் 274 பேர் பரிதாபமாக இறந்தனர்.இதில் 64 குழந்தைகள், 57 பெண்கள், 37 முதியவர்களும் அடங்குவர். இந்த தாக்குதலின் போது 4 பிணைக்கைதிகளை இஸ்ரேல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும், இஸ்ரேல் போர் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து வரும் பென்னி காண்ட்சுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் பென்னி காண்ட்ஸ் தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது காசாவில் ஹமாசுக்கு எதிரான போரில் உண்மையான வெற்றியை நோக்கி முன்னேறுவதை பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தடுக்கிறார். அதனால் நான் கனத்த இதயத்துடன் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து