முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் பயணிகளால் நிரம்பி வழியும் மெக்கா நகரம்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      ஆன்மிகம்
Mecca-city-2024-06-13

மெக்கா, இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சம் பேர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. 

முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும். ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சம் பேர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து சவுதி அரேபிய அதிகாரிகள் கூறும் போது, கடந்த 11-ம் தேதி வரை 15 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவுக்கு வந்துள்ளனர். 

கடந்த ஆண்டு 18 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டனர். அதைவிட இந்த ஆண்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். புனித யாத்திரை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது என்றனர். 

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே 8 மாதங்களாக நீடித்து வரும் போர் காரணமாக, காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள முடியவில்லை. அதே வேளையில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இருந்து 4,200 பாலஸ்தீனியர்கள் சவுதி அரேபியா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து