முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத் தீ விபத்தில் பலியான 3 தமிழர்கள் குறித்த தகவல் வெளியானது

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      தமிழகம்
Fire

Source: provided

கடலூர்: குவைத் தீ விபத்தில் பலியான 3 தமிழர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில், காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர், 2 வாரங்களில் சொந்த ஊர் திரும்ப உள்ள நிலையில் தீவிபத்தில் இறந்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்கஃப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். இதில் 7 தமிழர்கள் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சின்னதுரை (42) என்பவர் குவைத் விபத்தில் உயிரிழந்தார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சின்னதுரைக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார் குழந்தைகள் கிடையாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில், குடும்பத்தினருடன் இருப்பதற்காக வேலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கே முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பி குடும்பத்தினருடன் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மீண்டும் குவைத் கம்பெனியிலிருந்து அழைப்பு வந்ததால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மீண்டும் குவைத் சென்று வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் அவர் 2 வாரங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருவதாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் தீ விபத்தில் உயிரிழந்தது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவரது மனைவி சத்யா கண்ணீருடன் கூறுகையில், “எனது கணவர் சின்னதுரை உடலை சொந்த ஊருக்கு உடனடியாக கொண்டு வர, தமிழக முதல்வரும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.

கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அவரது நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை 6-வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் சிக்கி கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் காயமடைந்தார். அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மேலும் குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரத்தை சேர்ந்த ராமு என்பவர் தீ விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.கடந்த 25 ஆண்டுகளாக என்பிடிசி நிறுவனத்தின் அவர் வேலை செய்து வருவதாகவும், கடந்த 11-ஆம் தேதியுடன் விசா முடிவடைந்த நிலையில், ஊதிய கணக்குகளை முடித்துவிட்டு நாடு திரும்ப இருந்ததாகவும் அவரது மகன் தெரிவித்துள்ளார்.மேலும், அவரது உடலை விரைவாக இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.இதனிடையே, தஞ்சாவூரில் இருந்து குவைத் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளைஞரின் நிலை தெரியவில்லை என்றும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து