முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூப்பர் 8 சுற்றில் ஆஸி. உள்ளிட்ட 4 அணியுடன் இந்திய அணி மோத வாய்ப்பு

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      விளையாட்டு
10 Ram 50-A

Source: provided

நியூயார்க்: டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி 4 அணிகளுடன் மோத வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

லீக் சுற்றுகள்...

கடந்த 1-ம் தேதி தொடங்கிய 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று வரும் 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றன. இன்னும் நான்கு இடங்கள் எஞ்சியுள்ள நிலையில், அதில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அரையிறுதிக்கு...

இந்த நிலையில் இந்தியாவுடன் சூப்பர் 8 சுற்றில் மோத வாய்ப்புள்ள அணிகள் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அல்லது நெதர்லாந்து என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் 8 சுற்றில் மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகிவிடும். இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு எளிதாக சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து