முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் மத்திய அமைச்சர் குமாரசாமி தரிசனம் : பெரிய பொறுப்பை பிரதமர் அளித்துள்ளதாக பேட்டி

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      இந்தியா
Kumaraswamy 2024-05-15

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய அமைச்சரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி நேற்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடி எனக்கு பெரிய பொறுப்பை அளித்துள்ளார் என்று கூறினார். 

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி வெற்றி பெற்றார். 

இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சரவையில் குமாரசாமி மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் குமாரசாமி நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதியில் சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்த பின் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

பிரதமர் மோடி எனக்கு பெரிய பொறுப்பை அளித்துள்ளார். மத்திய அரசில் அமைச்சராக பதவி வகித்து வெற்றி பெற வெங்கடேஸ்வராவின் ஆசிர்வாதம் பெற வந்தேன் என்று கூறினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து