முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோர்

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      தமிழகம்
Goats

எட்டயபுரம், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை தென்மாவட்டத்தில் புகழ் பெற்ற சந்தையாகும். இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். இங்கு சாதாரண நாட்களில் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகும்.

இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் நேற்று காலை முதல் வியாபாரம் தொடங்கியது. இதற்காக வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு, கொடி ஆடு என பலதரப்பட்ட வகைகள் கொண்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

7 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.9 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. அதேபோல் எடைக்கு ஏற்ப ரூ.33 ஆயிரம் வரை விற்பனையானது. ஜோடி ஆடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம்வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவத்தனர். கடந்த ஆண்டு ரூ.6 கோடி விற்பனையான நிலையில் ஆடுகளின் விலை அதிகமாக இருந்ததால் விற்பனை இந்தாண்டு சற்று குறைந்து காணப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து