முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிமாநில ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்ய வேண்டாம் : பயணிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      தமிழகம்
Omni-Bus

Source: provided

சென்னை : வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள மக்கள், அதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, விதிகளை மீறி இயக்கப்பட்டால் ஆம்னி பஸ்கள் முடக்கப்படும் என்பதால் பயணிகளுக்கு அறிவுறுத்துவதாக  தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று இயங்கும் ஆம்னி பேருந்துகள், பயணிகள் பேருந்துகளை போல இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை 3 முறை அவகாசம் வழங்கியது. இருப்பினும், 652 பேருந்துகளில் 547 பேருந்துகள் ‘டிஎன்’ எனப்படும் வாகன பதிவெண்ணை இதுவரை பெறவில்லை.

இவ்வாறு அனுமதி பெறாத பேருந்துகளை ஜூன் 14-ஆம் தேதி முதல் இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து, போக்குவரத்து துறை ஆணையரும், அமைச்சரும் பரிசீலனை செய்து தொடா் விடுமுறை காரணமாக பயணிகளின் நலன் கருதி வரும் நேற்று (ஜூன் 18) காலை வரை தமிழகத்தில் வெளி மாநில பேருந்துகளை இயக்க அனுமதி அளித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்றுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள மக்கள், அதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் இனி முடக்கப்படும் என்பதால் அதில் பயணிக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து