முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னை பூசாரிக்கு ஜாமீன்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரியான கார்த்திக் முனுசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சாலிகிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் கார்த்திக் முனுசாமியை கைது செய்தனர். இந்த வழக்கில் கார்த்திக் முனுசாமி, தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், ஜனவரி மாதம் தன்னுடைய குடும்பத்தினருடன் அந்த பெண் கேரளாவுக்கு வந்ததாகக் கூறி அதற்கான ஆதாரங்களை கார்த்திக் முனுசாமி தாக்கல் செய்தார்.

அப்போது, காவல்துறை மற்றும் புகார் அளித்த பெண் தரப்பிலும் கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வாரத்துக்கு தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து