முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரிய அதிபர் கிம்-மை சந்தித்த புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

புதன்கிழமை, 19 ஜூன் 2024      உலகம்
Kim-Putin 2024-06-19

Source: provided

மாஸ்கோ : 24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா சென்ற ரஷ்ய அதிபர் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார் கிம்.

ரஷ்ய அதிபர் புடின் நேற்று வடகொரியாவுக்கு சென்றார். கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில், வடகொரியாவுக்கு வரும்படி புடினை வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அழைத்திருந்த நிலையில், புதின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

நேற்று காலையில் வட கொரியா தலைநகர் பியாங்யாங் சென்றடைந்த புடினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார் வட கொரிய தலைவர் கிம். அதன் பின்னர் இரண்டு தலைவர்களும் ஒரே காரில் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். 

அவர்கள் சென்ற கார், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது. இந்த காரை,  கடந்த ஆண்டு கிம்முக்கு புடின் வழங்கினார். கடைசியாக, 2000-ம் ஆண்டு ஜூலையில், வடகொரியாவுக்கு புடின் பயணம் மேற்கொண்டார்.

24 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அதிபரும், வட கொரிய தலைவரும் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது மற்றும் பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். 

இந்த ஆலோசனையின் முடிவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. உக்ரைன் மீது நடத்தப்படும் போரில் வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டிய தேவை ரஷ்யாவுக்கு உள்ளது. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர், முன்னெப்போதையும் விட இரு தலைவர்களிடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையிலும் புடினின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து