முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலின் விடாமுயற்சி, காங்கிரசை கட்டி காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்: அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி

புதன்கிழமை, 19 ஜூன் 2024      தமிழகம்
Sellur-Raju 2024-06-19

Source: provided

மதுரை : மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இ.சேவை மையம் கட்டுவதற்கான பூமிபூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். அருகில் ஜெயந்திராஜூ, கணேஷ்பிரபு, ரம்யா கணேஷ்பிரபு மற்றும் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், பரவைராஜா, கு.திரவியம், வி.பி.ஆர்.செல்வகுமார், சோலைராஜா, பி.கே.எம்.மாரிமுத்து, தங்கபாண்டி, கார்னர் பாஸ்கர், பழங்காநத்தம் ராஜாராம்,ராஜாசீனிவாசன், வக்கீல் பாலமுருகன், சி.ஆர்.கதிரவன் ஆகியோர் உள்ளனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது-மதுரை மேற்குத் தொகுதியில் பொதுமக்களின் நலனுக்காக 21 லட்சம் மதிப்பீட்டில் இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த இ-சேவை மையத்திற்கான அனைத்து உபகரணங்களும் பொதுப்பணித்துறை சார்பில் வழங்கப்படுகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இங்கு பிறப்பு இறப்பு சான்றிதழ் ஆகிய விண்ணப்பிக்கலாம்.

பிஜேபிக்கு எங்களுக்கும் ஒட்டுறவு இல்லை என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், நேற்று நானும் கூறிவிட்டேன். எதற்காக இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம்.? இந்த தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதாலும் தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளாது. *இடைத்தேர்தல் என்றாலே புது,புது,யுத்திகளை தி.மு.க. சட்டத்திற்கு புறம்பாக செய்யும். பணம் ஆறாக ஓடும் மக்களை எந்த வகையில் கவர்வதற்கும் தி.மு.க.வினர் செயல்படுவார்கள்.

பா.ம.க.வின் ஓட்டு வங்கி எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்கள் இந்த இடைத்தேர்தலில் நிற்கிறார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. அதனால் பக்கத்து வீட்டில் பூத்த மல்லிகை பூவிற்கு மனம் இல்லை என்று கூற முடியாது. ராகுலின் விடாமுயற்சி, காங்கிரசை கட்டி காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

திமுகவினர் வெற்றி பெற்ற மமதையில் பேசுகிறார்கள். எந்த கூட்டணியில் இல்லாமல் திமுக தனித்து நிற்க தயாரா?. அதிமுக போல் திமுக தனித்து நின்று அவரவர் திறமையை, செல்வாக்கை காண்பிக்கட்டும். திமுக தனித்து நிற்க தயாரா.? மக்களிடத்தில் உங்கள் சாதனையை சொல்லி சந்திக்க தயாரா? ஜெயலலிதா போன்று ஒரு ஆணித்தரமான முடிவுவெடுக்க இன்றைய முதல்வர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், தி.மு.க. தலைவர்களும் முடிவெடுப்பார்களா? என்று கேள்வி எழுப்பினார். சட்டமன்றத்தில் வருகின்ற திங்கட்கிழமை என்னுடைய உரை வருகிறது அப்போது பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து