முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்: மதவழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      உலகம்
Russia 2024-06-24

Source: provided

மாஸ்கோ : ரஷியாவில் மதவழிபாட்டு தலங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.

ரஷியாவின் காக்கசஸ் மாகாணம் மக்கஞ்கலா, டர்பெண்ட் ஆகிய நகரங்களில் உள்ள மதவழிபாட்டு தலங்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் இரவு (அந்நாட்டு நேரப்படி) பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். கிறிஸ்தவ மற்றும் யூத மதவழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. மதவழிபாட்டு தலங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், மதபோதகரை கழுத்தறுத்து கொலை செய்தனர். பின்னர், மதவழிபாட்டு தலங்களை தீவைத்து கொளுத்தினர்.

அதேபோல், டர்பெண்ட் நகரில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் போலீசார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடந்த நகரங்களுக்கு கூடுதல் படையினர் விரைந்துள்ளனர். பயங்கரவாதிகள் - பாதுகாப்புப்படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்றது. பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இசைநிகழ்ச்சி நடந்த அரங்கில் புகுந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து