முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற பாடுபட வேண்டும்: புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      இந்தியா
mODI 2023-05-25

புதுடெல்லி, நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற பாடுபட வேண்டும் என்று புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கியது.  முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “பாராளுமன்ற ஜனநாயகத்தில், இது ஒரு புகழ்மிக்க நாள். ஆம், சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக, நமது சொந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தில், பதவியேற்பு விழா நடக்கிறது. முன்னதாக, பழைய பாராளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழாக்கள் நடந்தன. இந்த குறிப்பிடத்தக்க நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களையும் நான் மனதார வரவேற்கிறேன். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்கு சேவை செய்யவும், 140 கோடி மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவும் எம்.பி.,க்கள் பாடுபட வேண்டும்.

பாராளுமன்றம் கூட்டம் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். உலகின் மிகப்பெரிய தேர்தல் மிகவும் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் நடத்தப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக, ஒரு கட்சிக்கு மூன்றாவது முறையாக சேவை செய்யும் வாய்ப்பை நாட்டு மக்கள் வழங்கியிருப்பதால் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சி அமைந்துள்ளது. எங்களின் நோக்கம், செயல்பாட்டுக்காக மக்கள் மூன்றாவது முறை எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

நாட்டை வழிநடத்த ஒருமித்த கருத்து மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, 140 கோடி மக்களின் ஆசைகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கு அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சிப்போம்.

நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகத்தின் மாண்பையும், நாட்டின் சாமானிய குடிமக்களின் எதிர்பார்ப்புகளையும் எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என நம்புகிறேன். 

நாடகங்களையோ, இடையூர்களையோ விரும்பவில்லை. மக்களுக்கு கோஷங்கள் தேவையில்லை, வாழ்வாதாரம் தேவை. நாட்டுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி, பொறுப்புள்ள எதிர்க்கட்சி தேவை. இந்த 18-வது மக்களவையில் வெற்றி பெற்ற எம்.பி.,க்கள் சாமானியர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நாட்டு மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர். இதன்மூலம் எங்களின் பொறுப்பு மும்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, மூன்றாவது பதவிக்காலத்தில், நாங்கள் மூன்று மடங்கு கடினமாக உழைப்போம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து