முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024 - பாரிஸ் ஒலிம்பிக்கில் கூடுதல் பதக்கங்களை வெல்லுமா இந்தியா?

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      விளையாட்டு
Paris-Olympics 2024-07-08

Source: provided

பாரீஸ் : நடக்கவுள்ள 2024 - பாரிஸ் ஒலிம்பிக்கில் கூடுதல் பதக்கங்களை வெல்லுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெண்களுக்கு.... 

பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது, ஒலிம்பிக் விளையாட்டு. அங்கு ஒலிம்பியா என்ற இடத்தில் ஜியஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு விழாவாக இது கொண்டாடப்பட்டது. இதில் யுத்தத்துக்கு தயாராவதற்கு உதவக்கூடிய ஓட்டம், மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு அனுமதி இல்லை.

33-வது ஒலிம்பிக்... 

2-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 1900-ம் ஆண்டில் நடந்தது. 24 நாடுகளைச் சேர்ந்த 997 வீரர், வீராங்கனைகள் 19 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.இந்த ஒலிம்பிக்கில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தற்போது 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது.

கூடுதல் பதக்கங்கள்...

ஜூலை 26-ல் தொடங்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து