முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 25-ம் இனி அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைபிடிப்பு மத்திய அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் இனி அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஜூன் 25-ம் தேதி அவசர நிலையை பிரகடனம் செய்தார். அப்போது அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகளின் குரல் ஒடுக்கப்பட்டன. இந்தியாவின் கருப்பு நாள் என எதிர்க்கட்சிகள் எமர்ஜென்சியை குறிப்பிடுவார்கள். இந்த நிலையில் ஜூலை 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:- ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ஒரு சர்வாதிகார மனநிலையோடு, தேசத்தின் மீது அவசரநிலையை விதித்து, நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை கழுத்தை நெரித்தார். மேலும் பத்திரிகைகளின் குரல் ஒடுக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 -ம் தேதியை அரசியல் படுகொலை தினமாக ('சம்விதான் ஹத்யா திவாஸ்') அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. சர்வாதிகாரத்தை எதிர்கொண்டு, ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடிய கோடிக்கணக்கான மக்களை கவுரவிப்பதே மோடி அரசின் நோக்கம். இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும் என பதிவிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பா.ஜனதா அரசியலமைப்பை அழிக்க முயற்சி செய்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து