எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், காவிரி நீர் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட் ஆணையின்படி தமிழகம் பெற வேண்டிய நீரை உடனடியாக பெற சுப்ரீம் கோர்ட்டை நாடி அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்வேறு கட்சிகள்...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நேற்று (ஜூலை 16) ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செயலர் மணிவாசகம், சட்டதுறை வல்லுநர்கள், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி., அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராமச்சந்திரன், மு.வீரபாண்டியன், விசிக சார்பில் தொல்.திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.எச்ஜாவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி.வேல்முருகன், கொமதேக சார்பில் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தண்ணீர் கிடைக்க....
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
கடும் பாதிப்பு....
தமிழகத்துக்கு சட்டபூர்வமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய நீரினை சென்ற ஆண்டு கர்நாடக அரசு விடுவிக்காததால் வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை நாடி அதன்பிறகு நீரை பெற்றோம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழலிலும் கர்நாடக அரசு இவ்வாறு நடந்துகொள்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளை தீர்மானங்களாக இயற்றப்பட்டுள்ளது.
தீர்மான விவரம்:
1) காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட் 16-2-2018 அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில் காவிரி நீர் ஒழுங்கற்று குழு தற்போது உத்தரவிட்டுள்ளவாறு தமிழகத்துக்கு காவிரி நீரை தரமுடியாது என மறுத்துள்ள கர்நாடக அரசுக்கு இந்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
2) காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட் ஆணையின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்துகிறோம்.
3) காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட் ஆணையின்படி தமிழகம் பெற வேண்டிய நீரை உடனடியாக பெறுவதற்கு தேவைப்படின், சுப்ரீம் கோர்ட்டை நாடி அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஒருமனதாக இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இந்த தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழு முயற்சியோடு மேற்கொண்டு காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026 -
இன்றைய ராசிபலன்
14 Mar 2026


