Idhayam Matrimony

ஓமன்: எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயம் : மீட்பு பணியில் ஐ.என்.எஸ். போர்க்கப்பல்

புதன்கிழமை, 17 ஜூலை 2024      உலகம்
Oman 2024 07 17

Source: provided

மஸ்கட் : ஓமன் அருகே கடலில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயமானார்கள். இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். தேஜ்-ஆனது மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

எண்ணெய் கப்பல் விபத்து குறித்த தகவல் உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் கப்பலில் இருந்து மாயமான 16 பேரையும் தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில் ஓமன் அருகே கொமரோஸ் கொடியுடன் கூடிய கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். தேஜ்-ஆனது P-81 கடல்சார் கண்காணிப்பு விமானம் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்களுடன் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்திய போர்க்கப்பல் கடந்த 15 -ம்தேதி முதல் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள இயக்கப்பட்டது. போர்க்கப்பல்  கடந்த 16-ம் தேதி கவிழ்ந்த எண்ணெய் டேங்கரை கண்டுபிடித்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து