முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 3 ஆண்டுகளில் காஷ்மீரில் மட்டும் 119 இந்திய வீரர்கள் பலி

புதன்கிழமை, 17 ஜூலை 2024      இந்தியா
Kashmir

புதுடெல்லி, 2021 முதல் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினரில் 40% பேர் ஜம்முவில் இறந்துள்ளனர் கடந்த 3 ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 119 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 2021-ம் ஆண்டு முதல் 40 சதவீதத்துக்கும் அதிகமான உயிரிழப்பு ஜம்மு பகுதியில் இருந்து பதிவாகியுள்ளன என்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜம்முவில் இருந்து 160 கிமீ தொலைவில் உள்ள டோடா மாவட்டத்தில் உள்ள தேசா வனப் பகுதியில் (ஜூலை 16) தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுன்ட்டரில் ஒரு அதிகாரி உட்பட உள்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தோடு சேர்த்து, 2021 முதல், பூஞ்ச், ரஜோரி, கதுவா, ரியாசி, டோடா மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 51 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் ஜம்முவில் நடந்த ஆறு தீவிரவாத தாக்குதல்களில் 12 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் முறையே 126, 103 மற்றும் 29 என்ற அளவில் தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளன.

5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த டோடா மாவட்டத்தில் நடந்த தேடுதல் நடவடிக்கை உளவுத்துறை தகவலை அடிப்படையாகக் கொண்டு நடந்தது என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார். கடந்த மூன்று வாரங்களில் டோடா மாவட்டத்தின் வனப்பகுதிகளில் பாதுகாப்புப் படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மூன்றாவது பெரிய என்கவுன்ட்டர் இது. 20 - 25 தீவிரவாதிகள் அடங்கிய தீவிரவாத குழு தேசா வனப் பகுதியை சுற்றிய 30-40 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளனர். இவர்கள் குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து